முந்திய அத்தியாயத்தில் பார்த்த சம்பவங்களை போல சின்ன சின்ன விசயத்தில் மக்கள் செய்யும் தவறுகளை கண்டு கொந்தளித்து கொண்டு இருந்தான். ரோட்டில் யாராவது குப்பை போடுவதை பார்த்தால் அவர்கள் கண் முன் மறையும் வரை அருகில் உள்ளவனிடம் திட்டி கொண்டே இருப்பான் நாட்கள் செல்ல செல்ல தான் எதையாவது மாற்றியே தீர வேண்டும் என்னால் மட்டும் தான் இவற்றை எல்லாம் மாற்ற முடியும் என்று எண்ணினான். மற்றவற்றையே நினைத்து தான் வாழ வேண்டிய வாழ்க்கையை வாழவில்லை கனவுகளிலே மிதக்க தொடங்கினான் வருங்காலங்களை மட்டுமே யோசித்து கொண்டு இருப்பான். இப்படி இருப்பதினால் அவனுடைய பாரங்கள் தான் கூடி கொண்டே சென்றதே தவிர அவனுடைய தரம் குறையவில்லை.
இதை கவனித்து கொண்டு இருந்த நண்பன் ஒருவன் அறிவுரை ஒன்றை கூறினான்.
எந்த ஒரு மனிதனும் தனக்கு பாதிப்பு வர கூடாது என்று தான் நினைப்பான் அதோடு எல்லா மனிதனும் நல்லவர்களும் இல்லை எல்லாரும் கெட்டவர்களும் இல்லை தங்களின் சுயத்திற்க்காக அவரவர் தங்களுக்குள் திட்டங்களை தீட்டுகின்றனர் அவர்கள் தீட்டுட்டும் பாதைவழியாக அவர்கள் செல்லுகின்றனர் அதன் வழியாக எவராலும் செல்ல முடியாது.
என்னை பொறுத்த வரை மனிதனுக்கு நல்லது கெட்டடது என்பது தெரியாமல் இருப்பதே சிறந்தது. அதனால மற்ற எல்லாத்தையும் மறந்துவிட்டு உன் வாழ்க்கையை வாழ தொடங்குவது தான் நல்லது என்றான்.
காலேப்பு அதை எற்றான் என்று சொல்ல முடியாது. ஏன் என்றால் இது ஒரு நாள் மாற்றத்திற்கானது அல்ல அதோடு ஒரே நாளில் மாறபோவதும் இல்லை இதை காலேப் உணர்ந்தவனாய் பாரங்களை இறக்கி விட்டான்.
முற்றம்.
இந்த கதையை படித்தமைக்கு நன்றி.