மூன்று மாதம் கடந்து விட்டது அதே நேரம் என் தாடியும் வளர்ந்து விட்டது. பலர் அதை எடுக்க வற்புறுத்தியும் அவர்களின் அறிவுரைகளை தள்ளிவிட்டு தாடியை வளர்த்து கொண்டு இருக்கிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு அதனால் என்னவோ எனது எண்ணங்களுக்கு அந்த ஆண்டவனையும் இழுத்து கொண்டேன். ஆண்டவன் ஆண்களுக்கு ஏன் தாடியை வளர செய்ய வேண்டும், காரணத்தோடு தான் ஆண்டவன் அப்படி ஓர் அமைப்பை உருவாக்கி இருக்கிறான். ஒரு வேலை ஆண்டவன் ஆண்களுக்கு தாடி நன்றாக இருக்காது என்று யோசிக்காமல் விட்டுவிட்டாரா. எது என்னவோ இருந்துட்டு போகட்டும் ஆண்களுக்கு இயற்க்கையாகவே தாடி வளர்கிறது அதை எதுக்கு எடுக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம். சில பேர் ஆறு அறிவு இருந்தால் தாடியை எடு, என்று சொல்லுகிறார்கள் அப்போது எனது நெஞ்சம் சொல்லுகிறது தாடியை எடுப்பது தான் நாகரிக மனித சமுதாயம் போல.
மேலே சொன்ன கருத்துக்காக நான் தாடியை எடுக்கவே மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. மனதில் தோன்றியது அதை எழுத்துக்களாக மாற்றிவிட்டேன்.
ஒரு விவசாயி இவ்வாறாக சொன்னார் முகத்தில் தாடி இருந்தால் தற்ப்போது வருவாய் தடைபட்டு உள்ளது என்று அர்த்தம் அதே இது தாடி இல்லை என்றால் விளைச்சல் அபாரமாக வந்து வருவாய் வருகின்றனர் என்று அர்த்தம் என்றார்.
இன்னும் ஒருவர் என்னை பார்த்து உடல் சரியில்லையா என்று கேட்டார், நான் அவரிடம் அப்படி ஒன்றும் இல்லையே நான் நன்றாக தானே இருக்கிறேன் ஏன் என்னிடம் இப்படி கேட்டிர்கள் என்றேன். அவர் அதற்க்கு தாடி வளர்த்து இருக்கியே அதான் கேட்டேன் என்றார்.
இப்படி பல வரலாறு இருந்தாலும் சில பேர் தங்களை கெத்தாக காட்டுவதற்க்கும் வளர்க்கின்றனர் வேறு சிலர் பணத்தை மிச்சம் பிடிப்பதற்க்காகவும் வளர்க்கின்றனர்.
வாசித்தமைக்கு நன்றி. மூன்று மாதம் கால தாடி.