ஈரான், இந்த பெயரை கேட்கும் போதே உள்ளத்தில் இன்பம் பொங்குகிறது. அங்கு வாழும் பழங்குடி மக்கள் அந்த மண் மீது கொண்டுள்ள ஈர்ப்பை பார்க்கும் போது உண்மையாகவே ஈரானியனா இருந்திருக்க கூடாதா என்று தோன்றியது. முழு ஈரானும் பாலைவனம் அல்ல, அங்கு பாலைவன பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் பாலைவனத்தை சோலைவனமாக மாற்றுவதை விரும்புவதில்லை சொல்லபோனால் பாலைவனம் அவர்களின் நிலம் அல்ல உயிர். பாலைவனம் பாலைவனமாகவே இருக்கட்டுமே சோலைவனம் சோலைவனமாகவே இருக்கட்டுமே என்ற நிலைபாட்டையே கொண்டுள்ளனர். சோலைவனத்தையே பாதுகாக்க அக்கறை இல்லாத காலத்தில் பாலைவனத்திற்க்காக போராடவும் தயாராகும் மக்களை பார்க்கும் போது எனக்கு வியப்பு எற்பட்டது பொருத்தம் உடையதே.