ஒரு அதிகார மிக்க தலைவரா பிரதமர் திரு. நரேந்த மோடி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை உண்டு. சில நேரங்களில் திரு. மோடி அரசாங்கத்தின் மீது நன்மதிப்பை வைப்பதில்லை. நான் அதற்க்காக காங்ரஸ் அதரவாளனோ பாரதிய சனதா ஆதரவாளனோ இல்லை. காங்ரஸ் ஆரசாங்கத்துடன் ஒப்பிடும் போது சனதா அரசாங்கம் பரவாயில்லை என்று தோன்றுகிறதே தவிர மற்றபடி ஒன்றும்மில்லை. என்னை பொறுத்த வரை நாடு வல்லரசாக மாறவேண்டும் என்ற கொள்கை தேவையில்லாதது. ராணுவ தர வரிசையில் இந்தியா முதலாவதாக இருக்க வேண்டும் உலகத்தில் சிறந்த பத்து நாடுகளில் இந்தியா முதன்மை பட வேண்டும் போன்ற கொள்கைகளுக்கு மாறுபட்டவன். சில நேரங்களில் இந்தியா வல்லரசாக மாறி என்னத்த புடுங்க போது போன்ற கேள்விகளையும் கேட்டு இருக்கிறேன். இதற்க்காக இந்தியா மீது எனக்கு அக்கரை இல்லை என்று ஆகிவிடாது. என்னை பொறுத்த வரை இந்த மண் எல்லா உயிர் இனங்களுக்கும் சொந்தமானது தான் ஆனால் என்ன இத்தனை கோடி மக்கள் இருப்பதினால் நாம் பிரித்து கொண்டோம் அது மொழி, இனம் மதம் போன்றவற்றால் பிரித்து கொண்டோம்.
திரு. மோடி அவர்கள் ஒரு முறை சொன்னார் உலகளவில் இந்தியா மிளிர சனதா அரசாங்கம் வேலை செய்து கொண்டு இருக்கின்றனர் என்று. இதை தான் நான் மறுக்கிறேன். இதில் காங்ரஸ் அரசாங்கம் சொன்னாலும் மாற்று கருத்து இல்லை. நான் பெரும்பாலும் கெத்து என்ற வார்த்தையை விரும்புவதில்லை. இந்தியாவை பார்த்து மற்ற நாடுகள் புகழவும் வேண்டாம் இகழவும் வேண்டாம் என்பவற்றை ஆதரிக்கிறேன். நம்ம உண்டு நம்ம வேலை உண்டு என்று இருப்பதே சிறந்தது என்று நினைக்கிறேன்.